நவரசா ஆந்தாலஜி படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது..!
மணி ரத்னம் தயாரிப்பில் 9 பேர் இயக்கியுள்ள நவரச ஆந்தாலஜி படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது. ஒன்பது விதமான உணர்வுகளை கட்டுப்படுத்தும் விதமாக கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் 9 கதைகளை இயக்கியுள்ளனர்.
இதில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரசன்னா, சித்தார்த், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனைவரும் இணையும் நவரச ஆந்தாலஜி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






