ZyCoV-D தடுப்பு மருந்து ஆனால் ஊசி செலுத்த தேவையில்லை!
புதிதாக அனுமதி கோரி விண்ணப்பிக்கபட்டுள்ள சைக்கோவீட் தடுப்பு மருந்தை உடலில் செலுத்துவதற்கு ஊசி தேவையில்லை. ஊசி போட்டுக்கொள்வது என்றாலே பலருக்கு குறிப்பாக சிறார்களுக்கு பயம்தான்.
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கூட சிலர் தயங்குவதற்கு இது காரணமாக உள்ளது. இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த சைடிஸ் கேடில நிறுவனம் சைக்கோவீட் கொரொனா தடுப்பு மருந்து தயாரித்து மூன்று கட்ட பரிசோதனைக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
3 டேஸ் போட்டுக்கொள்ளும் இந்த தடுப்பு மருந்து அனுமதிக்கப்பட்டால் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் பயன்படுத்தலாம். அந்த மருந்து உடலில் செலுத்துவதற்கு ஊசி தேவையில்லை. ஊசிக்கு பதிலாக கருவி மூலம் தோலின் நுண் துளைகள் வழியாக தடுப்பு மருந்து செலுத்தப்படும்.







