--- --:--:-- --

அகழாய்வில் மேலும் ஒரு எலும்புக்கூடு கண்டெடுப்பு..!

9

கீழடி அகழாய்வில் மேலும் ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பாக ஆறாம் கட்ட ஆய்வு பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன .

 

கீழடி அகரம் மணலூர் மற்றும் கொந்தகை நடத்தப்பட்ட அகழாய்வுகளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் ஏழாம் கட்ட அகழாய்வு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

 

அருகே உள்ள மற்றொரு பகுதியான கொந்தகையில் கடந்த வாரம் மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல எலும்புக்கூடுகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon