கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்..!
கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சிங் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.
கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார். சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்க்கும் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டு இருப்பதாக கூறினார்.






