சசிகலாவின் சகோதரர் திவாகரன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி..!
கொரொனா தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பரிசோதனையில் கொரொனா தொற்று உறுதியானதால் மன்னார்குடியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவரப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






