--- --:--:-- --

நடிகை ராஷ்மிகா மந்தனாவை சந்திக்க 900கி.மீ பயணித்து சென்ற ரசிகர்..!

1

மீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை சந்திக்க அவரது ரசிகர் 900 கிலோ மீட்டர் பயணித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த ஆகாஷ் என்பவர் நடிகை ராஷ்மிகாவின் தீவிர ரசிகர் எனக் கூறப்படுகிறது.

 

தனது மாநிலத்தில் இருந்து ராஷ்மிகாவின் இடம் இருக்கும் கர்நாடகாவில் குடகு பகுதிவரை 900 கிலோ மீட்டர் பயணித்துள்ள ஆறுதல் நடிகையின் வீட்டு விலாசத்தை கேட்டுக்கொண்டபடி சென்றதால் அவர் மீது சந்தேகம் அடைந்த சிலர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

 

அதன் அடிப்படையில் அந்த நபரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் குடகு பகுதியில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு செல்ல முடியாது எனக் கூறியுள்ளனர். மேலும் ராஷ்மிகா படப்பிடிப்புக்காக மும்பை சென்று விட்டார் என்ற தகவலையும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

இதனால் அந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon