--- --:--:-- --

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்ததாக வெளியான தகவல் வெறும் வதந்தியே..!

13

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் வரை பெற்றெடுத்த கூறப்பட்ட நிலையில் அது தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் இரட்டை குழந்தை உள்ள நிலையில் மீண்டும் கருவுற்று இருந்ததாகக் கூறப்படும் அவருக்கு மருத்துவமனை ஒன்றில் 8 ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என மொத்தம் பத்து குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்டது.

 

இந்த செய்தி உலகம் முழுவதும் வைரலாகி 10 குழந்தைகளை பெற்றெடுத்த அவர் சாதனை படைத்துள்ளதாக பார்க்கப்பட்டது.

 

இந்த நிலையில் அவர் 10 குழந்தைகளை பெற்று எடுக்கவில்லை என்றும் குழந்தைகள் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் இது போல் செய்தி வெளியிட வேண்டாம் என்றும் தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon