--- --:--:-- --

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்த தமிழக முதல்வர்..!

10

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்துள்ளார். முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றுள்ளார்.

 

நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் மு க ஸ்டாலின் வழங்கி பேசினார்.

 

இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

 

இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் அது குறித்து பேசி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon