தடுப்பூசி போடுவதில் இனி வயது வாரியாக வேறுபாடு இருக்காது..!

கொரொனா தடுப்பூசி போடும் நடைமுறைகளில் இனி வயது வாரியாக வேறுபாடு இருக்காது என்றும் வரும் 21ஆம் தேதி முதல் அனைத்து வயதினரும் ஒரே மாதிரி கருதப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

45 வயதுக்கு கீழானவர்கள் மேலானவர்கள் என இரு வகையினராகப் பிரித்து தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் இனி அந்த வேறுபாடு கைவிடப்படுகிறது. ஜூன் 21ஆம் தேதி புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வரும் நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

கொரோனா சிகிச்சை வழிமுறைகளை கற்றுக் கொடுக்கவும், ஏற்கனவே உள்ள சிகிச்சை திறனை அதிகரிக்கவும் ஒரு லட்சம் முன் களப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்கும் முயற்சியில் பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.

 

தொடக்கநிலை நோயாளிகள் , பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகள், மருத்துவ கழிவுகளை கையாளுதல் உள்ளிட்டதன் அடிப்படைகளில் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூன்றாம் அலை சில மாதங்களில் தொடங்கும் என எச்சரிக்கைகள் வெளியாகும் நிலையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


Leave a Reply