போலி கணக்குகளை ரசிகர்கள் யாரும் பின் தொடர வேண்டாம்..!
Rajinikanth, Kamal Haasan, Vijay And Others at the Nadigar Sangam Protest To Set Up The Cauvery Management Board
நடிகர் விஜய்யின் மகன் மகள் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை விஜய் ரசிகர்கள் யாரும் பின்தொடர வேண்டாமெனவும் விஜய்யின் செய்தி தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரில் போலியாக கணக்கினை தொடங்கியுள்ளது ரசிகர் மற்றும் நிர்வாகிகளின் வாயிலாக நடிகர் விஜய்க்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தனது செய்தி தொடர்பாளர் ரியாஸ் மூலமாக தனது ரசிகர்களுக்கும் மன்றத்தினருக்கும் நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.







