சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு..!
சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தனக்கு தெரியாமல் கதையை மாற்றி நிறைவு செய்து படத்தை வெளியிட தயாரிப்பாளர் மதியழகன் முயல்வதாக நிர்வாக இயக்குனர் ரகுமான் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் 24 லட்சம் ரூபாய் ஊதியம் கொடுப்பதாக கூறி விட்டு 8 லட்சத்து 15 ஆயிரம் மட்டுமே வழங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். நிலுவை ஊதியத்தையும் தனது கதையை மாற்றுவதற்காக இழப்பீடாக 18 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட கூறியுள்ளார்.







