குரங்கின் தலையில் மாட்டிக் கொண்ட அலுமினிய பாத்திரம்..!
தெலுங்கானா மாநிலம் மெகபூப் அருகே குரங்கின் தலையில் அலுமினிய பாத்திரம் மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
வெயில் கொடுமை காரணமாக அங்கு உள்ள வெங்கடேஸ்வரா காலனி குடியிருப்பில் நுழைந்து குரங்கு தண்ணீர் குடிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அதன் தலை அலுமினிய பாத்திரத்தில் மாற்றிக் கொண்டது.
இதனையடுத்து அந்த பாத்திரத்தை எடுக்க குரங்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை. மேலும் அங்கு வந்த மற்றொரு குரங்கு முயற்சித்தும் பலனில்லை.
இதனையடுத்து அந்த குரங்கு உணவு உண்ண முடியாமல் தண்ணீர் அருந்த முடியாமல் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த குரங்கை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.






