--- --:--:-- --

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு..!

4

மிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் வழக்கமாக ஜூலை 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

 

ஆனால் இரண்டு நாட்கள் தாமதமாக கேரளாவின் தெற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியது. வரும் 5-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சை ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon