--- --:--:-- --

தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா: 26,513 பேருக்கு தொற்று உறுதி.. 490 பேர் உயிரிழப்பு..!

2

மிழகத்தில் தற்போது 2,96,131 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 23 ஆயிரத்து 029 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 31,673 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 02 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.

 

ஆனாலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் இன்று மேலும் 2,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,332 பேரும், திருப்பூரில் 1338 பேரும், ஈரோட்டில் 1,653 பேரும், சேலத்தில் 1, 140 பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon