ஆகஸ்ட் மாதத்தில் தினசரி ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்..!
இந்தியாவில் வரும் ஜூலை மாதத்தின் இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ தினசரி ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மருத்துவ கவுன்சில் தலைவர் பல்ராம் பார்க்கவா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை எதுவும் இல்லை என தெரிவித்த அவர் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடிவடையும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான இடைவெளி தொடர்ந்து 12 வாரமாகவே நீடிக்கிறது என்றும் இதில் மாற்றம் எதுவுமில்லை என்றும் கூறியுள்ளார்.






