கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை..!
கொரொனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அறநிலையத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாத ஊதியம் இன்றி பணியாற்றும் கோவில் அர்ச்சகர்கள் பூசாரிகளுக்கு நான்காயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கொரொனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அறநிலையத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 10 கிலோ அரிசி, 15 வகை பொருட்களும் உதவியாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத ஊதியமின்றி பணியாற்றும் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு 4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.






