தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு நாட்களுக்கு கிருஷ்ணகிரி ,தர்மபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






