ஆன்லைனில் கொரொனா மருந்து எனக்கூறி 42 ஆயிரம் ரூபாய் மோசடி..!
கொரொனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஆன்லைனில் மருந்து வாங்க ஒருவர் ஆயிரக்கணக்கான ரூபாயை இழந்துள்ள மற்றொரு சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
அந்த மாவட்டத்தில் உள்ள மாத்துரை சேர்ந்த தமிழினி தனது மனைவியை கொரொனாவுக்கு பறிகொடுத்த நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட உறவினர் ஒருவருக்காக மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தேடுகிறார்.
அப்போது இந்த மருந்து இருப்பதாக தெரிவித்து அந்த இணையதளத்தில் 42 ஆயிரம் ரூபாயை தாம் அக்கவுண்டில் செலுத்தியுள்ளார். இரண்டு மணி நேரத்தில் மருந்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.






