--- --:--:-- --

வரும் 26 ஆம் தேதி நிகழும் சந்திர கிரகணம்..! வெறும் கண்களால் பார்க்க முடியும்..!

11

வரும் 26ம் தேதி நிகழும் சந்திர கிரகணத்தின்போது நிலவு சிவப்பு வண்ணத்தில் தோன்றும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

 

இந்த ஆண்டு வருகிற 26-ஆம் தேதி நிகழும் சந்திர கிரகணம் மிகவும் சிறப்பானது. நீள்வட்டப்பாதையில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும்போது இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது சந்திரன் மீது சூரியனின் கதிர்கள் உள்ளவரை பூமி முற்றிலுமாக சிவப்பாகிறது.

 

இதனால் சந்திரன் ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது .இது வானியல் விஞ்ஞானிகளால் சூப்பர் பிளட் மூன் என்று அழைக்கப்படுகிறது. இந்த வானியல் அதிசயத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். இந்த சந்திர கிரகணம் சுமார் 3 மணி நேரம் நடைபெறுகிறது.

 

முழு சந்திர கிரகணம் சுமார் 15 நிமிடங்கள் நீடிக்கிறது. இந்த நேரப்படி பிற்பகல் 2.17 மணிக்கு தொடங்கி இரவு 7.19 மணிக்கு முடிவடைகிறது. இந்திய நேரப்படி பகலிலேயே முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon