--- --:--:-- --

தளபதி 65 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி அமைத்துள்ளது..!

4

கொரொனா காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆவதால் தளபதி 65 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 65வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது.

 

அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரொனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு தற்போது படப்பிடிப்பு தாமதம் ஆவதால் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

 

அதன்படி தளபதி படம் அடுத்த ஆண்டு சித்திரை முதல் நாள் வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon