கொரோனா நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கிய சிவகார்த்திகேயன்..!
நடிகர் சிவகார்த்திகேயன் கொரொனா தடுப்புக்கான கொரோனா நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து அதற்கான காசோலையை நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.
அதேபோல ஜெயம் ரவி மற்றும் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெயம்ரவி இது கஷ்டமான தருணம் என்றும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.






