மாரடைப்பு ஏற்பட்டு டிராபிக் ராமசாமி மரணம்..!
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டிராபிக் ராமசாமி மரணமடைந்தார். அவருக்கு வயது 87. ஆரம்பத்தில் துணி நூல் ஆலை மேற்பார்வையாளராகவும், பிறகும் ஊர்காவல் படையிலும் ராமசாமி பணியாற்றியுள்ளார்.
அப்போது சென்னை பாரிமுனை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கண்டு அவர் தானே முன்வந்து போக்குவரத்தை சீர் செய்தார். இதனால் டிராபிக் ராமசாமி என்ற பெயரை பெற்றார்.
ஐகோர்ட்டில் பொது நல வழக்குகள் தொடர்ந்து சிலவற்றில் வெற்றி கண்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக டீன் கூறினார்.







