--- --:--:-- --

தலைமைச்செயலாளர் உள்ளிட்டோருடன் ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை..!

1

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார்.

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர், நிர்வாக ஆணையர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், அதிகாரிகள் முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

 

ஆறாம் தேதியில் இருந்து கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும், ஆறாம் தேதி முதல் 28 வரை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் நாட்களில் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 

ஏழாம் தேதி புதிய அரசு பதவி ஏற்கும் நிலையில் நாளை பதவியேற்பு விழாவை எளிமையான முறையில் நடத்துமாறு பேசப்பட்டதாக தெரிகிறது. நேற்று மூத்த அதிகாரிகளுடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார்.

Leave a Reply

Right Menu Icon