மூக்கில் செலுத்தும் கொரோனா மருந்தை தயாரிக்கும் நிறுவனம்…!
புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தடுப்பூசி வர்த்தகத்திற்காக இங்கிலாந்தில் 2,400 கோடி ரூபாயில் முதலீடு செய்கிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் போடப்பட்டு வருவதுடன் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது தடுப்பூசி வணிகத்தை விரைவு படுத்தும் விதமாக இங்கிலாந்தில் சுமார் 2,400 கோடி ரூபாயை முதலீடு செய்யும் சீரம் நிறுவனம் இதன் மூலமாக 6,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடாஜெனிக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைத்து மூக்கில் செலுத்தும் கொரொனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் அதற்கான முதல் கட்ட சோதனையை இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது.







