--- --:--:-- --

வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை..!

2

கொரொனா வைரஸ் அச்சுறுத்தலை நீடிப்பதால் வரும் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஒரு நாளில் நாடு முழுவதும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.

 

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவ தேர்தல் மற்றும் பரப்புரைக் கூட்டங்களே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே இரண்டாம் தேதி கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதிப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பும் பின்பும் தேர்தல் கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபடத் தேவையில்லை என்றும் வெற்றி வேட்பாளர்கள் வெற்றி சான்றிதழை பெற சம்பந்தப்பட்ட அதிகாரி அலுவலகத்திற்கு செல்லும் போது உடன் இரண்டு நபர்களை மட்டுமே அழைத்து செல்ல வேண்டுமெனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon