நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார்..!
சென்னையில் தங்கியிருந்த விடுதி அறைக்கு வாடகை பாக்கி தராமல் கேட்டால் மிரட்டுவதாக நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சகோதரி உடன் தங்கியிருந்த நடிகை விஜயலட்சுமி இரண்டு மாதமாக அறை வாடகை தராமல் இருந்துள்ளார்.
சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் சென்றுவிட்டு அவர் திரும்பிவந்து பார்த்தபோது விடுதியின் உரிமையாளர் உத்தரவின் பேரில் அவரது உடைமைகளை வேறு ஒரு அறைக்கு மாற்றி வைத்திருந்தனர்.
இதனால் நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக ஆபாசமாக பேசி விடுதி ஊழியர் சிவாவை செருப்பால் அடிக்கவும் வாடகை பாக்கி ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்ட போது தரமுடியாது என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.






