மகாராஷ்ட்ராவில் நிலை சீராக தொடங்கியுள்ளது..!
நாடு முழுவதும் கொரொனா தொற்றால் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் நிலையில் இரண்டாவது அலை தொடங்கிய மகாராஷ்ட்ராவில் நிலை சீராக தொடங்கியுள்ளது.
36 மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கையை விட குணமடைந்துவருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நிலைமை கட்டுக்குள் வருவதாகவும் அந்த மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பரிசோதனைகளை அதிகரித்து தொற்று பாதித்தவர்களை உடனடியாக தனிமை படுத்தியதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாக அவர் கூறினார். விதிமுறைகளை அனைவரும் முழுமையாக அனுசரிக்கும் பட்சத்தில் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு தடுப்பூசிகள் தவிர வெளிநாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்யவும் முடிவு செய்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் மும்பையில் உச்சநிலை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இனி பெரிய ஏற்றத்தாழ்வின்றி இதில் சில நாட்களுக்குப்பின் குறையத் தொடங்கி விடும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.






