--- --:--:-- --

உறவினர்களை வீட்டிற்கு அழைக்காதீர்கள்..!

7

தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் இருக்கும் போது முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பு பாதிப்புகள் மற்றும் தடுப்பு குறித்து நிதி ஆயோக் சுகாதாரத்துறை உறுப்பினர் விகேபால் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர் இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரிப்பதால் சோதனை மற்றும் தடுப்பூசியை குறைக்க மாட்டோம் என்றார். எந்த அளவிற்கு தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறதோ அந்த அளவிற்கு தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

 

வீட்டில் உள்ளவர்கள் யாருக்கு தொற்று இருக்கும் என தெரியாததால் மக்கள் வீடுகளில் இருக்கும் போது முக கவசம் அணிவது அவசியம் என்று கூறினார். மேலும் தற்போதைய சூழலில் உறவினர்கள் யாரையும் வீட்டிற்கு அழைக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

.மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறிய விகே பால் அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மாதவிடாய் காரணமாக கூறி தடுப்பூசி போட்டுக் கொள்வதை தள்ளிப் போட வேண்டிய அவசியமில்லை என்று விளக்கம் அளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon