கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மணமகன் கவச உடை அணிந்தபடி திருமணம்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் நோய்த்தடுப்பு கவச உடைகளை அணிந்தபடி திருமணம் செய்துள்ளார். ரத்னம் பகுதியை சேர்ந்த நபருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டது.
இருப்பினும் நிச்சயிக்கப்பட்ட நாளிலே திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மணமகனும் மணமகளும் பிபிஐ கிட் திருமணம் செய்து கொண்டு அக்னியை வலம் வந்தனர் முன்னதாக மணமகனுக்கு கொரொனா கண்டறியப்பட்டதால் திருமணத்தை தடுப்பதற்காக அந்த பகுதி அதிகாரிகள் வந்தனர். பின்னர் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருமணம் நடத்த அனுமதி கொடுத்தனர்.






