இன்று இரவு 9 மணி முதல் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு..!
கர்நாடகாவில் இன்று இரவு 9 மணி முதல் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பால் விற்பனை மையங்கள் போன்றவை காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார். அதன்பிறகு கட்டுமான உற்பத்தி மற்றும் வேளாண் துறையினர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்காது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் எடியூரப்பா அறிவித்துள்ளார்.






