தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்..! புதிய கட்டுப்பாடுகள் 26 ஆம் தேதி முதல் அமல்..!
வருகிற 26-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. திரையரங்குகள் உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ பதிவு கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் விமான பயணிகள், கப்பல் பயணிகள் இ பதிவை காட்ட வேண்டும். சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களுக்கு அனுமதி இல்லை.
தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் நின்று கொண்டே பயணிக்க அனுமதி இல்லை. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க அளிக்கப்பட்டு அனுமதி 50 லிருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 நபர்களாக இருந்த அனுமதி 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





