--- --:--:-- --

காவலர்களை பார்த்து பன்றிக் கூட்டம் எனக்கூறிய பெண்..!

11

முகக் கவசம் அணியாமல் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு காவல் நிலையம் சென்ற பெண் காவலரை பார்த்து பன்றி கூட்டம் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நந்தினி என்ற பெண் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர்.

 

ஆனால் அபராதம் செலுத்த மறுத்த அந்த பெண் போலீஸ்காரர் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து நந்தினி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

இதையடுத்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த நந்தினி முகக் கவசம் அணிய மறுத்தார். விசாரணை முடிந்து வெளியே வந்த நந்தினி அங்கிருந்த காவலர்களைப் பார்த்து பன்றி கூட்டம் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டதுை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon