--- --:--:-- --

பெரும் நஷ்டத்தில் இந்தியன் 2 திரைப்படம்..!

11

ந்தியன் 2 திரைப்பட விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனமான லைக்காவும், இயக்குனர் ஷங்கரும் கலந்து பேசி சுமூக தீர்வு காணுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க தடைவிதிக்க லைக்கா நிறுவனம் கூறிய வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி அவர்கள் விசாரணைக்கு வந்தது. நடிகர் விவேக் இறந்துவிட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டி இருப்பதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

கடந்த மார்ச் மாதத்திற்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு என்பது சுமூக தீர்வு இருக்காது என தெரிவித்த நீதிபதிகள் இரு தரப்பினரும் கலந்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon