--- --:--:-- --

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் காணாமல் போன 30 லட்சம் மதிப்புள்ள கருவி..!

12

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரைப்பை மற்றும் குடல் உள்நோக்கி கேமரா கருவி காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை பிரிவில் இரைப்பை மற்றும் குடல் உள்நோக்கி கேமரா என்ற கருவியை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

 

அதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய். பிற துறைகளிலும் தேவைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும். அந்தக் கருவி திடீரென காணாமல் போனது. மருத்துவமனை ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைத்தபாடில்லை.

 

அதுகுறித்து துறைரீதியான விசாரணை நடத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஜூலியானா, நேரு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். காணாமல் போன கருவியை இறுதியாக பயன்படுத்திய காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon