நடிகர் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு..!
இளையராஜா இசையமைப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கு விடுதலை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெயமோகனின் சிறுகதையை தழுவி வெற்றிமாறன் இயக்கி வரும் இந்தப் படத்தில் கதாநாயகனாக சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர்.
மின்சார வசதி கூட இல்லாத சத்தியமங்கலம் மலைப்பகுதியில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. உருவாகிவரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.






