முகப்பொலிவு சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் நடிகை..!
முகப்பொலிவு சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மருத்துவர் பைரவியிடம் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். நடிகையும், மாடல் அழகியுமான ரைசா முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.
அங்கு மருத்துவர் பைரவி அறிவுறுத்தலின் அடிப்படையில் உதவி மருத்துவர் மற்றும் உதவியாளர் சிகிச்சை அளித்துள்ளனர். பத்து நாட்களுக்கு பிறகும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மீண்டும் மருத்துவரை அணுகிய போது மற்றொரு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இதை மருத்துவர் பைரவி நேரடியாக சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த இரண்டு சிகிச்சைக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பணம் செலுத்திய நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் வலது கண்ணில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன் முகம் வீங்கி இருப்பதாகவுகும் குற்றம்சாட்டியிருந்தார்.
பைரவி அளித்த தவறான சிகிச்சை தான் இதற்கு காரணம் என கூறியதாக ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.







