பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க டோக்கன்..!
பெங்களூருவில் கொரொனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை டோக்கன் பெற்று தகனம் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மின்மயானத்தில் சடங்குடன் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. கர்நாடக மாநிலத்தில் கொரொனா இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில் ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பெங்களூருவில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் சடலங்களை எரியூட்டுவதற்கு போதிய வசதி இல்லாததால் சிக்கல் நீடித்து வருகிறது. கொரொனா தீவிரமடைந்து வரும் . நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் பெங்களூர் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள எரியூட்டும் இடத்தில் சடலங்களுடன் ஆம்புலன்ஸ்கள் வரிசைகட்டி காத்திருந்த காட்சி வெளியாகியுள்ளது.
மாநகராட்சி சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு உறவினர்கள் ஆம்புலன்ஸில் காக்க வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







