பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது..!
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது என்றும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ஏதுவாக மாநிலம் முழுவதும் பள்ளிகளில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படும் என்று வெளியான தகவல் உண்மையில்லை என திட்டவட்டமாக மறுத்து உள்ள பள்ளிக் கல்வித்துறையில் தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. தவறான தகவல்களை வெளியிட்டு மாணவர்கள், பெற்றோர்கள் குழப்ப வேண்டாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது.






