--- --:--:-- --

உயிரிழந்து 7 மாதம் ஆன நபருக்கு கொரொனா பாஸிட்டிவ் என வந்த குறுஞ்செய்தியால் குழப்பம்..!

5

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உயிரிழந்து 7 மாதம் ஆன நபருக்கு கொரொனா சோதனை செய்யப்பட்டதாக கூறி செய்தி அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் வினோத்.

 

இவருக்கு கொரொனா பரிசோதனை செய்யப் பட்டதாகவும் முடிவு வரும் வரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது. உயிரோடு இல்லாத நபருக்கு பரிசோதனை செய்துள்ளதாக அனுப்பப்பட்ட குறுஞ் செய்தியால் குழப்பத்தில் உள்ளார்.

 

இதற்குள் 19ஆம் தேதி தென்காசி கொரொனா கட்டுப்பாட்டு அறையிலிருந்து வினோத்தின் மனைவிக்கு உறுதியாகியுள்ளதாக உடனடியாக சிகிச்சை அளிக்குமாறும் தகவல் வந்துள்ளது. இதனால் திகைத்துப்போன வினோத் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon