--- --:--:-- --

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் 2வது முறையாக ரத்து..!

5

ங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த அவர் கொரொனா பரவல் காரணமாக அவர் தமது பயணத்தை ரத்து செய்தார்.

 

ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் போரிஸ் ஜான்சன் இந்திய பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. அது ஒரு நாள் ஆக குறைக்கப்பட்டது. இந்தியாவில் இரண்டாவது அலை வேகமாக இருந்துவரும் நிலையில் போரிஸ் ஜான்சன் இந்த பயணம் ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.

 

எனினும் போரிஸ் ஜான்சன் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் நேரில் சந்திப்பார் என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon