தண்டவாளத்தில் விழுந்த குழந்தை..! நூலிழையில் காப்பாற்றிய நபர்..!
ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி வந்து காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மாங்கனி ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் பெண் ஒருவர் குழந்தையுடன் நடந்து செல்கிறார்.
தண்டவாளத்தை ஒட்டி தாயின் கையைப் பிடித்துக் கொண்டு சென்று குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்து விடுகிறது. அப்போது ரயில் வந்து கொண்டிருக்க அந்த பெண் பயத்தில் கதறி கொண்டிருக்கிறார்.
திடீரென எதிர்பாராத நேரத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் எதிர்திசையில் மின்னலென ஓடி வந்த ஒருவர் தண்டவாளத்தில் இருக்கும் குழந்தையை மேலே தூக்கி கொடுக்கவும் அவருக்கு அருகில் ரயில் நெருங்கவும் சரியாக இருந்துள்ளது.
அடுத்த சில வினாடிகள் அவரும் தண்டவாளத்தில் இருந்து தாவிக்குதித்து மேலே வந்து தப்பி விடுகிறார். அதிர்ச்சியளிக்கக் கூடிய இந்த வீடியோவை இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.






