கடை திறப்பு விழாவிற்கு வந்த புகழை காண குவிந்த மக்கள்..! கூட்டம் கூடியதால் கடைக்கு சீல்..!
நெல்லை வண்ணாரப்பேட்டையில் ஏ டூ இசட் என்ற கடைக்கு வந்த குக்கு வித் கோமாளி நடிகர் புகழை காண ஏராளமானோர் திரண்டதால் அந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
நெல்லையின் பிரபலமான செல்போன் கடை ஏடு இசட் இதன் புதிய கிளையாக வண்ணாரப்பேட்டையில் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வது தொடர்பான ஒருசெலுத்துவதாக இருந்தது. இதனைத்தொடர்ந்து சின்னத்திரை நடிகர் குக்கு வித் கோமாளியில் நடிக்கும் புகழ் வந்திருந்தார்.
அவர் வந்த நேரத்தில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி அவருடன் செல்பி எடுப்பதற்காக முண்டியடித்தனர். தற்போது நெல்லை மாவட்டத்தில் அதிகமாக கொரொனா பரவி வரும் நிலையில் முண்டியடிக்கும் கூட்டமாக இருந்ததால் காவல்துறையினர் தகவலறிந்து கடைக்கு சீல் வைத்துள்ளனர்.






