உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரொனா..!
உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரொனா பாதிப்பு இருப்பதால் யோகி ஆதித்யநாத் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறி சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட யோகி ஆதித்யநாத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் அலுவலக ஊழியர்கள் சிலருக்கும் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்போல உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ்க்கு இன்று தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






