திருமணம் செய்துகொள்வதாக கூறி இங்கிலாந்து இளவரசர் ஏமாற்றியதாக புகார்..!
தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய இங்கிலாந்து இளவரசர் ஹாரியை கைது செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண் வழக்கறிஞரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பெண் வழக்கறிஞர் இந்த வழக்கை தாக்கல் செய்தவுடன் தானே ஆஜராகி வாதாடிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அரவிந்த் சர்மா இது பகல் கனவு காண்பவரின் கற்பனை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து வைத்தார்.
இருவருக்குமிடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இணையதள ஆங்கில உரையாடல்களில் அதிகாரத்தில் இலக்கணப் பிழைகள் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி இத்தகைய நிறுவனங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளிக்க முடியாது என தெரிவித்தார்.






