--- --:--:-- --

போலீஸ் சீருடையில் வந்து சொத்து பத்திரத்தை கேட்டு மிரட்டிய தம்பி..!

5

திருச்சி மாவட்டத்தில் சொத்து பிரச்சினையில் காவல்துறையினர் போல் போலி உடை அணிந்து சென்று அக்காவிற்கு மிரட்டல் விடுத்த நபரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடாசலபுரம் என்பவர் தனது கணவருடன் வசிக்கிறார்.

 

வெண்ணிலாவின் தந்தை ஏற்கனவே காலமாகிவிட்டார். இந்த நிலையில் வெண்ணிலாவிடம் இருந்த சொத்து பத்திரங்களை கேட்டு அவரது தம்பி ராமலிங்கம் என்பவர் அடிக்கடி தகராறு செய்துள்ளார். வீட்டு பத்திரத்தை தர மறுத்து விட்ட நிலையில் அவரை மிரட்டி பணத்தை பறிக்க காவலர் வேடத்தில் ராமஜெயம் வந்துள்ளார்.

 

நாடக கம்பெனியில் காவல்துறை சீருடையில் கூலிங் கிளாஸ், வாடகைக்கு வாங்கி அணிந்துக் கொண்டு ராமஜெயம் தன்னை காவல் அதிகாரி என்று கூறி அக்காவிடம் ஆவணங்களை கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் காவல் அதிகாரி போல வந்து தனது தம்பி தான் என்பதை எளிதில் அடையாளம் கண்ட அவர் ஆவணங்களை தர மறுத்துள்ளார்.

 

வாக்குவாதத்தை பார்த்து ராமஜெயத்தை சூழ்ந்து கொண்ட கிராம மக்கள் உப்பிலியபுரம் காவல்துறையினரை வரவழைத்து ராமஜெயத்தை ஒப்படைத்தனர். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon