ஒர்க் ஷாப்பில் தந்தைக்கு உதவியாக 4 வயது குட்டி மெக்கானிக்..!
சிறுவர்கள் பெரியவர்களின் செயலை பார்த்து வளர்வார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மற்றும் கணேசன். சகோதரர்களான இவர்கள் இருவரும் ஒர்க் ஷாப் நடத்தி வருகின்றனர்.
ஒர்க் ஷாப்பிற்கு அடிக்கடி வரும் கண்ணனின் நான்கு வயது மகன் கிருஷ்ணன் தனது தந்தையும், சித்தப்பாவும் வேலை செய்வதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்.
பழுது நீக்குவதாக நினைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஸிபேனரை கையில் எடுத்துக்கொண்டு சிறுவன் பணி செய்ய முயற்சித்தது சுற்றி இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.
இதுபோன்ற குழந்தைகள் வருங்காலத்தில் விஞ்ஞானிகளாக வருவார்கள் என்று அக்கம்பக்கத்தினர் வாழ்த்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.






