இந்திய பயணிகள் நியூசிலாந்து வர தடை..!
இந்தியாவிலிருந்து பயணிகள் நியூசிலாந்து வருவதற்கு அந்நாட்டு பிரதமர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை நியூசிலாந்து பிரதமர் இந்திய பயணிகள் வர தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து வரும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் உட்பட அனைவரும் நியூசிலாந்தில் வர அனுமதி இல்லை என்றும் இந்தியாவிலிருந்து வருபவர்களில் பலருக்கு தொற்று உறுதி ஆவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






