மாணவியின் கல்விக்காக 1 லட்சம் கொடுத்து உதவிய நடிகை..!
டுவிட்டரில் கல்விக்காக உதவி கோரிய கல்லூரி மாணவிக்கு உடனே உதவிக்கரம் நீட்டிய காஜல் அகர்வாலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான காஜல் அகர்வால் தற்போது தமிழில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
ஹைதராபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது கல்லூரி தேர்வு கட்டணத்தை செலுத்த 83 ஆயிரம் ரூபாய் தேவை என டுவிட்டர் வாயிலாக காஜல் அகர்வாலிடம் கேள்வி கேட்டிருந்தார்.
உடனடியாக தனது உதவியாளர் மூலம் சம்பந்தப்பட்ட மாணவியை தொடர்பு கொண்ட காஜல் அகர்வால் அவர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டறிந்து ஒரு லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.







