--- --:--:-- --

கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டிலில் பயன்படுத்தாத ஏழு தோட்டாக்கள்..!

5

ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் பாட்டிலில் பயன்படுத்தாத ஏழு துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட.து. தனுஷ்கோடி பழைய தேவாலயம் கடற்கரையோர மீனவர் ஒருவர் கரை ஒதுங்கிய கழிவுகளை சேகரித்துக் கொண்டிருந்தார்.

 

அப்போது கரையோரம் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததை கண்டு போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த மத்திய உணவுத்துறை அதிகாரிகள் பயன்படுத்தாத 5.6 mm கொண்ட நான்கு தோட்டாக்களும் 9mm கொண்ட மூன்று தோட்டாக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon