தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சிறப்பு விழிப்புணர்வு பரப்புரை..!
இந்தியாவில் தினசரி கொரொனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சிறப்பு விழிப்புணர்வு பரப்புரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரொனா அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதிவேகமாக அதிகரித்து வரும் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பல்வேறு துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.
வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் உண்மையாக பின்பற்றுகின்றன. கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா என்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நாளை முதல் வரும் 16-ஆம் தேதி வரை நாடு முழுவதும் சிறப்பு விழிப்புணர்வு பரப்புரை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட பாதிப்பு அதிகமிருக்கும் மாநிலங்களுக்கு சிறப்பு குழுக்களை அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது. பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு சிறப்பு குழுக்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.






